8-pound gold chain seized from Grandma near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமம் அணைப்பாடி செல்லும் சாலையில் வசிப்பவர்கள் சீனிவாசன் (வயது 76), மலர்கொடி(வயது 68), தம்பதியினர்.இவர்களது மகன் ரமேஷ் பெரம்பலூரில் வசித்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக தனியாக வசித்து வரும் சீனிவாசனும் மலர் கொடியும் நேற்று இரவு வழக்கம் போல் ஓட்டு வீட்டிற்குள் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி ஒருவர் மூதாட்டி மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். தனது கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச்சங்கிலியை யாரோ ஒருவர் இழுப்பதை அறிந்து மூதாட்டி மலர்கொடி சத்தம் போட்டுள்ளார்.

இதற்கிடையே சுதாரித்துக் கொண்ட மர்மநபர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானான். இதனிடையே கூச்சல் சத்தம் கேட்டு மலர்கொடி என் கணவர் சீனிவாசனும் பக்கத்துவீட்டு வசிப்பவர்களும் ஓடிவந்து நடந்தவற்றை கேட்டறிந்து அப்பகுதியில் சங்கிலி பறிப்பு திருடனை தேடியுள்ளனர்.

இவர்களின் தேடல் தோல்வியில் முடிவடைய, சம்பவம் குறித்து, மூதாட்டி மலர்கொடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்த மருவத்தூர் போலீசார், உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு தடய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, சங்கிலி பறிப்பு திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் நிகழ்ந்த இந்த செயின் பறிப்பு சம்பவம், கொளக்காநத்தம் கிராமம் உட்பட பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்) , பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்குவது, கழுத்தில் தங்கச் சங்கிலிகளை அணிந்திருப்பது, பீரோ உள்ளிட்ட பாதுகாப்பு பெட்டகங்களை பூட்டி அருகிலேயே சாவியை வைத்திருப்பது, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைப்பது, போன்ற கவனக்குறைவான செயல்களில் ஈடுபடக் கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!