8-th pay commission immediately to form a federal government employee union circle conference for emphasis:
8-வது ஊதியக்குழுவை உடனே அமைத்திட மத்திய அரசுக்கு அரசுஊழியர் சங்க வட்டமாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 4-வது வட்ட மாநாடு துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு வட்டத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆளவந்தார் மாநாட்டை தொடங்கிவை த்து சிறப்புரை ஆற்றினார்.
செயலாளர் தியாகராஜன், துணைத் தலைவர் சிவகுமார், முத்துசாமி, தனலட்சுமி, இணைச் செயலாளர்கள் சரவணன், வடிவேலு, தேவதாஸ், பொருளாளர் லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
1.7.2016 முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படியை ரொக்கமாக வழங்கவேண்டும். 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதத்தை உடனே வழங்கவேண்டும்.
மத்தியஅரசு 8-வது ஊதியக்குழுவை உடனே அமைத்திடவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பயனளிப்பு ஓய்வூதியத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணிஇடங்களை உடனே நிரப்பிடவேண்டும். திருவண்ணாமலையில் ஜனவரி 2017-ல் நடைபெற உள்ள 12-வது மாநில மாநாட்டில் திரளான பேர் கலந்துகொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.