8,000 tiles sent to Vedaranyam area affected by the Gaja storm in Namakkal municipality

நாமக்கல் நகராட்சி சார்பில் காஜா புயல் பாதித்த வேதாராண்யம் பகுதிக்கு 8 ஆயிரம் பழைய ஓடுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

கஜா புயலினால் வேதாராண்யம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். நாமக்கல் பகுதியில் பல கோழிப்பண்ணையாளர்கள் த ங்கள் கோழிப்பண்ணை கூரைகளில் ஏற்கனவே இருந்த ஓடுகளை மாற்றி சிமென்ட் அட்டைகள் மாற்றி உள்ளனர். இதனால் பல பண்ணைகளில் பழைய ஓடுகளை இருப்பில் வைத்துள்ளனர்.

நகராட்சி கமிஷனர் கோழிப்பண்ணை உரிமையாளர்களை அனுகி அவர்களிடம் இருந்து பழைய ஓடுகளைப் பெற்று அவற்றை லாரிகளில் ஏற்றி வேதாராண்யத்திற்கு அனுபி வருகிறார். இதுவரை 4 லாரிகளில் சுமார் 8 ஆயிரம் ஓடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நகராட்சிப் பணியாளர்கள் லாரிகளில் வேதாராண்யம் சென்று அங்குள்ள நகராட்சி அலுவலர்களின் வழிகாட்டுதல் பேரில் தேவையான இடங்களில் இந்த ஓடுகளை இறக்கி வைத்துவிட்டு வருகின்றனர். இதுவரை வாங்கிலி கோழிப்பண்ணை, என்கே கோழிப்பண்ணை, ராசி ஃபுட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலவசமாக ஓடுகளை வழங்கியுள்ளனர். மேலும் பழைய ஓடுகளை சேகரித்து அனுப்பும் பணியில் நகராட்சி கமிஷனர் ஈடுபட்டுள்ளார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!