8th Kindergarten Graduation Ceremony at Siruvachur Almighty Vidyalaya School!
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் 8ஆம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது.
பள்ளி முதல்வர் ஹேமா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் பி.விஜய்ஆனந்த் கலந்து கொண்டு மழலையர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது பேசிய அவர் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே மனஅழுத்தம் ஏற்படாமல் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்காலத்தில் உடற்கல்வி, மனக்கல்வி, பாலியல் கல்வி என பாடதிட்டத்தில் வழிவகை செய்ய கல்வியாளர்கள் முன் வரவேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர்கள் சந்திரோதயம், சாரதா மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் சக்தி, கனிதா, சத்தியா, வேம்பு ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.