9.55 crore works on 52 lakes under the Chief Minister’s Tamil Nadu Civil Works Project; 1022.02 cubic feet of water storage: Collector V. Santha Information

அரும்பாவூர் சின்ன ஏரி

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின், வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீரின் தேவையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குடிமராமத்து திட்டத்தினை தமிழகம் முழுவதும் செயல்படுத்திட உத்தரவிட்டதன் அடிப்படையில் குடிமராமத்து திட்ட பணிகள் 2016ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம் கலுங்குகளை பழுதுபார்த்தல், மறு கட்டுமானம் வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவை செய்து ஏரிகளின் எல்லை கற்களை நடுதல், சீமைக் கருவேல் முட்செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் குடிமராமத்துப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-17 ஆம் நிதியாண்டில் 9 ஏரிகளில் ரூ.74 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதனால் 181.17 மி.கனஅடி நீர் தேக்கப்பட்டு 825.63 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதாடு 1000க்கும் மேற்பட்ட கிணறுகளின் நீர்மட்டமும், 2017-18ஆம் நிதியாண்டில் 15 ஏரிகளில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதனால் 396.97 மி.கனஅடி நீர் தேக்கப்பட்டு 1651.99 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதாடு 1000க்கும் மேற்பட்ட கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

மேலும் அதனைத் தொடர்ந்து 2019-20ஆம் நிதியாண்டில் 14 ஏரிகளில் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதனால் 255.33 மி.கனஅடி நீர் தேக்கப்பட்டு 1049.86 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதாடு 1000க்கும் மேற்பட்ட கிணறுகளின் நீர்மட்டமும், 2020-21ஆம் நிதியாண்டில் 14 ஏரிகளில் ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதனால் 188.55 மி.கனஅடி நீர் தேக்கப்பட்டு 1207.13 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதாடு 1000க்கும் மேற்பட்ட கிணறுகளின் நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் 52 பணிகள் மேற்கொள்ளப்பட்டதனால் 1022.02 மி.கனஅடி நீர் தேக்கப்பட்டு 4832.62 ஹெக்டேர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறவும், கிணற்று பாசனம், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வேளாண் பெருங்குடி மக்கள் தொய்வின்றி உழவுத் தொழிலை மேற்கொள்ள தமிழக அரசால் சிறப்பான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!