9 Electric motors seize illegally drinking sapped
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் வீடுகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார்களை வைத்து, ஊராட்சி சார்பில் பைப் லைன்களில் தண்ணீர் உறிஞ்சிய வீடுகளில் இருந்து 9 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் சீராக குடிநீர் விநியோகிக்கவும் சட்ட விரோதமாக மின் மோட்டார் இணைத்து குடிநீர் உறிந்தவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் தாசில்தார் , பிடி ஒ, மண்டல வளர்ச்சி அலுவலர்கள், போன்ற வருவாய் துறை அதிகாரிகளை கொண்ட குழு பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம் கிராமத்தில் வீடுகளில் சட்ட விரோதமாக மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சபடுகிறது என்றும் இதனால் எங்களக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று கிராம பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை கண்காணிக்க ஆட்சியரின் உத்தரவின் பேரில் கோனேரிப்பாளையம் கிராமத்தில் இன்று காலை பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சுமார் 9 -க்கும் மேற்பட்ட வீடுகளில் சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டார்களை வைத்து குடிநீர் உறிஞ்சபடுவதை கண்டு பிடித்து அந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்
மேலும் அலுவலர்கள் கூறுகையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
உடனடியாக அக்கிராம மக்கள் ஒன்று திரண்டு பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவலருக்கும், பொதுமக்களுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் 15 மோட்டார்களில் 9 மின்மோட்டார்கள் மட்டுமே உள்ளது. மீதம் உள்ள 6 மின் மோட்டர்கள் , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என வாக்குவாதம் செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் வந்து மீதமுள்ள மோட்டார்கள் பறிமுதல் செய்வதாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.