93.83 percent pass in Eleventh Standard Examination: Perambalur District 11th in State
பெரம்பலுர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பதினோறாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
நடைபெற்று முடிந்த பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,270 மாணவிகளும், 4,216 மாணவர்களும் என மொத்தம் 8,486 பேர் தேர்வெழுதினர்.
இதில் 3,869 மாணவர;களும், 4,093 மாணவிகளும் என மொத்தம் 7,962 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 91.77 சதவீத தேர்ச்சியும், பெண்கள் 95.85 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 39 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், ஒரு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியும், 4 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 13 சுயநிதிப்பள்ளிகளும், 15 மெட்ரிக் பள்ளிகளும் என மொத்தம் 72 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
இதில் கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 2 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 6 சுயநிதிப்பள்ளிகளும், 8 மெட்ரிக்பள்ளிகளும் என மொத்தம் 17 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன, என தெரிவித்தள்ளார்.