94.10 percent pass in the 12th standard general exam: Perambalur district is 12th in the state level

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று (16.05.2018) தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

நடைபெற்று முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,495 மாணவிகளும், 4,370 மாணவர்களும் என மொத்தம் 8,865 பேர் தேர்வெழுதினர்.

இதில் 4,063 மாணவர்ர்களும், 4,279 மாணவிகளும் என மொத்தம் 8,342 பேர; தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 92.97 சதவீத தேர்ச்சியும், பெண்கள் 95.19 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 93.54 சதவீதம் பெற்று மாநில அளவில் 15வது இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு 94.10 சதவீத தேர்ச்சிபெற்று மாநில அளவில் 12வது இடம் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 70 மேல் நிலைப் பள்ளிகளில் 4 அரசு மேல் நிலைப் பள்ளிகள் உள்பட 24 மேல் நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இதில் அரசுப்பள்ளிகளில் லப்பைக்குடிகாடு (பெண்கள்), எளம்பலூர், கவுள்பாளையம் மற்றும் கிழுமத்தூர்; மாதிரி அரசு மேல் நிலைப் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் எறையூர் நேரு மேல் நிலைப் பள்ளியும்,

சுயநிதிப் பள்ளிகளில் உடும்பியம் ஈடன் கார்டன் மேல் நிலைப்பள்ளி, அகரம்சீகூர் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் மௌலான மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம் எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் ஸ்ரீராகவேந்திரா மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் ஸ்ரீசாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 சுயநிதிப்பள்ளிகளும்,

மெட்ரிக் பள்ளிகளில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம் ஈடன்கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நக்கசேலம் ஹயகிரிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரிசைப்பட்டி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

அரும்பாவூர் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எளம்பலூர் செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை புனித ஆன்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா உள்ளிட்ட 12 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளும் 100 சதவீத தேர்ர்ச்சி பெற்றுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 94.10 சதவீதம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் 12-வது இடம்

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று (16.05.2018) தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

நடைபெற்று முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,495 மாணவிகளும், 4,370 மாணவர்களும் என மொத்தம் 8,865 பேர் தேர்வெழுதினர்.

இதில் 4,063 மாணவர்ர்களும், 4,279 மாணவிகளும் என மொத்தம் 8,342 பேர; தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 92.97 சதவீத தேர்ச்சியும், பெண்கள் 95.19 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 93.54 சதவீதம் பெற்று மாநில அளவில் 15வது இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு 94.10 சதவீத தேர்ச்சிபெற்று மாநில அளவில் 12வது இடம் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 70 மேல் நிலைப் பள்ளிகளில் 4 அரசு மேல் நிலைப் பள்ளிகள் உள்பட 24 மேல் நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இதில் அரசுப்பள்ளிகளில் லப்பைக்குடிகாடு (பெண்கள்), எளம்பலூர், கவுள்பாளையம் மற்றும் கிழுமத்தூர்; மாதிரி அரசு மேல் நிலைப் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் எறையூர் நேரு மேல் நிலைப் பள்ளியும்,

சுயநிதிப் பள்ளிகளில் உடும்பியம் ஈடன் கார்டன் மேல் நிலைப்பள்ளி, அகரம்சீகூர் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் மௌலான மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம் எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் ஸ்ரீராகவேந்திரா மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் ஸ்ரீசாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 சுயநிதிப்பள்ளிகளும்,

மெட்ரிக் பள்ளிகளில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம் ஈடன்கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நக்கசேலம் ஹயகிரிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரிசைப்பட்டி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

அரும்பாவூர் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எளம்பலூர் செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை புனித ஆன்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா உள்ளிட்ட 12 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளும் 100 சதவீத தேர்ர்ச்சி பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வந்த சூப்பர்-30 சிறப்பு வகுப்பில் படித்த 56 நபர்களும் தேர;ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 32 நபர்கள் 1000க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதில் சரண்யா என்ற மாணவி 1,121 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பொதுத் தேர்வெழுதிய மாற்றுத் திறனாளிகளில் கண்பார்வை குறைபாடுடையவர்கள்; 6 நபர்களும், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 5 நபர்களும் தேர்வெழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 21 பேரில் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், இதர வகை மாற்றத்திறனாளிகள் 09 பேரில் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வந்த சூப்பர்-30 சிறப்பு வகுப்பில் படித்த 56 நபர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 32 நபர்கள் 1000க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதில் சரண்யா என்ற மாணவி 1,121 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பொதுத் தேர்வெழுதிய மாற்றுத் திறனாளிகளில் கண்பார்வை குறைபாடுடையவர்கள்; 6 நபர்களும், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 5 நபர்களும் தேர்வெழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 21 பேரில் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், இதர வகை மாற்றத்திறனாளிகள் 09 பேரில் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!