A 2 B Soan papdi is a huge hit among the people of Perambalur!
பெரம்பலூர் மாவட்ட மக்கள் நல்ல பொருட்களுக்கு தொடர்ந்து ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
160 கிளைகள் கொண்ட பிரபல நிறுவனமான அடையார் ஆனந்தபவன் A2B என்ற பெயரில், ஸ்வீட் கார வகைகளை பெட்டிக்கடை, சூப்பர் மார்க்கட், மொத்த விலைக் கடைகளில் மிக்சர் உள்ளிட்ட கார வகைகளும், சோன்பப்டி உள்ளிட்ட இனிப்பு வகைகளையும், 250 கி, 100 கிராம், என பல அளவுகளில் விற்பனை செய்து வருகிறது.
குறிப்பாக, பெரம்பலூரில் சில கடைகளில் 250 கிராம் சுமார் ரூ.130 க்கு விற்பனை செய்து வரும் வேளையில், A 2 B – யின் 250 கிராம் சோன் பப்டி மொத்த விலைக் கடையில் ரூ. 65க்கும், சூப்பர் மார்க்கட் கடைகயில் ரூ. 67க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ. 70க்கும் கிடைக்கிறது. இதே போல வேறு சில நிறுவனங்களும் 200 கிராம் அளவில் விற்பனை செய்து வருகிறது.
ஆனால், A 2 B நிறுவனம் ரூ. 70க்கே 250 கிராம் அளவில், சோன் பப்டியும், விற்பனை செய்வதால், பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சாக்லெட், பைனாப்பிள், ஆரஞ்ச் போன்ற பிளேவர்களும் இருப்பதால், குழந்தைகளுக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
தீபாவளி நேரங்களில் அதிக அளவில் வணிகர்கள் A 2 B சோன் பப்டியையே அதிகம் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.