A boy fell into a well near Perambalur and died!
பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில், இன்று விவசாய பணியில் மருந்து தெளித்து கொண்டிருந்த தந்தைக்கு உதவ, கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கொண்டு வந்த கொடுத்த 11 வகுப்பு சிறுவன் வழுக்கி தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். விவசாயி. அக்கிராமத்தில் உள்ள பூவாடையம்மன் கோவில் உள்ளது. அதனருகே இவருக்கு சொந்தமான விவசாய வயல் உள்ளது. இன்று காலை சுமார் 8.15 மணிக்கு வயலில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவரது மகன் விஷால் (16), பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவுவதற்காக குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். தண்ணீர் எடுக்க சென்ற சிறுவன் தவறி விழுந்ததில் நீச்சல் தெரியாதால், சத்தம் எழுப்பி உள்ளான், சத்தத்தை கேட்ட பாஸ்கர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குதித்து சிறுவனை கடுமையாக மீடக முயன்றும் காப்பற்ற முடியவில்லை. கிணற்றின் அடிப்பகுதிக்கே சிறுவன் சென்றாதால் மூச்சுத் திணறி உயிரிழந்தான்.
இது குறித்த தகவலின் பேரில், விபத்து மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், மற்றும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்றில் கிடந்த சிறுவன் விஷாலின் உடலை தீயணைப்பு மீட்பு படையினர் தேடி கண்டிபிடித்து ஒப்படைத்தனர். உடலை பார்த்த பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுது துடித்தனர்.
உடலை உடற்கூறு ஆய்விற்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.