A car collided with a car near Perambalur, breaking the leg of the person behind the bike.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் (43). இவர் குடும்பத்துடன் குன்னத்தில் நடக்கும் திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் எசனையை அடுத்த ஆலம்பாடி பிரிவு சாலை அருகே சென்ற போது, வண்டியின் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால், சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள 74 கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவர் ஓட்டி வந்த கார் முன்னால் சென்ற கார் மீது மோதியதில், கார் வலது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி வயலில் விழுந்தது. இதில் இரு கார்களிலும் சென்றவர்களுக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால், பின்னால்.. புல்லட் பைக்கில் வந்த சேலம் மாவட்டம் கொண்டைம்பள்ளியை சேர்ந்த அரவிந்த் (20) விபத்திற்கு உள்ளான கார்களில் மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்ததில், இடது புற பள்ளத்தில் பைக் சென்று விழுந்தது. இதில் அரவிந்த்க்கு வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரோந்து போலீசார் எஸ்.ஐ. ராஜாராம் தலைமையில் சென்ற போலீசார் அவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.