A car Tyre burst into a house near Perambalur!
பெரம்பலூர் அருகே ஓடிக் கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், வீட்டினுள் புகுந்தது.
துறையூர் சாலையில் இருந்து, பெரமபலூர் நோக்கி ஒரு இன்னோவா கார் வந்து கொண்டிருந்து. கார் குரும்பலூர் பாளையம் அருகே வந்த போது, காரின் முன் பக்க திடீரென வெடித்தது. ஓட்டுனர் வாகனத்தை கட்டுப்படுத்த முயன்ற போது, அருகே இருந்த வீட்டினுள் புகுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதில் நல்வாய்ப்பாக காரில் வந்த யாருக்கும் உயிர்சேதம் ஏற்படாமல் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.