A case has been filed against 10 people including IJK founder Parivendar for violating the election code of conduct in Perambalur!
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐ ஜே கே சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே வர வேண்டும் என்று அறிவுறுத்தியும், அதையும் மீறி10 பேருடன் வேட்பு மனு தாக்கல் செய்ததாக ஐஜேகே நிறுவனரும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் உட்பட 10 பேர் மீது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி அளித்த புகாரின் பேரில், IPC 143, 188 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.