A case of touching a woman in a bus near Perambalur; The teenager was beaten in front of the public and taken to the court causing a stir!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் வாலிபரை பேருந்தில் இருந்து இழுத்து போட்டு தாக்கி, பொதுமக்கள் உதவியுடன் நீதிமன்றத்திற்கு இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வடகரையை சேர்ந்தவர் அப்துல் தாரிக் (34), திருமணமாணவர். ஒரு குழந்தை உள்ளது. இவர் இன்று காலை, பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை வழியாக செல்லும் பேருந்தில், வடகரை கிராமத்திற்கு செல்ல கிருஷ்ணாபுரத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பேருந்தினுள், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது கைப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் வேப்பந்தட்டையில் உள்ள நீதிமன்றத்தில் ஊழியராக உள்ளார். அவரும் வேப்பந்தட்டை நீதிமன்ற பணிக்கு செல்ல அந்த பேருந்தில் பயணித்துள்ளார்.
பேருந்து வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் வந்தடைந்ததும் சில்மிசம் செய்த வாலிபரை கை மற்றும் காலணியால் தாக்கி பேருந்தில் இறக்கினார். மேலும், அப்துல் தாரிக்கும் பதிலுக்கு அப்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவரை அருகே இருந்த வேப்பந்தட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று உட்கார வைத்தார்.
இதுகுறித்து அங்கு வழக்கு விசாரணை தொடர்பாக வந்திருந்த பெண் எஸ்.எஸ்.ஐ யிடம் வாலிபரை ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.