A cat that sucks milk a dog near Perambalur
நாய்க்கும் பூனைக்கும் பரம்பரை பகை! ஆனால், பெரம்பலூர் அருகே நாயிடம், பூனை பால் குடிக்கும் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 65). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவருக்கு சிறுவாச்சூர் அருகே தோட்டமும், வீடும் உள்ளது. அங்கு நாய் மற்றும் பூனை ஆகியவற்றை வளர்த்து வருகிறார்.
இதில் அவர் வளர்த்து வரும் நாய் தற்பொழுது கர்ப்பமாக உள்ள நிலையில், பூனை பால் குடித்து வருகிறது. இச்சம்பவத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் அதிசயத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.