A female psychologist who had a family with a doctor without divorce near Perambalur has died!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள சிறுகன்பூரை சேர்ந்தவர் டாக்டர் நட்சத்திரம் மகன் நேரு (38), எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு, அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜான்சிராணி என்ற மாற்று சமூகத்தை பெண்ணுடன் காதல் திருமணம் செய்து கொண்டார். அதில் அவருக்கு, வருத்தரன் (12) ஜியா (8) லோகித் (3) என்ற குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டனர். ஜான்சிராணி பெரம்பலூரில் தனியாக வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி உள்ளார்.
அரியலூர் மாவட்டம் கீழப்ழூரை சேர்ந்த பூமிபாலசுந்தரம் – சிவசக்தி என்பவருக்கும் திருமணம் ஆகி சுஷ்மிதா (18), என்ற பெண் குழந்தையும் உள்ளது. உளவியல் நிபுணரான சிவசக்தி கருத்து வேறுப்பாட்டால் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், டாக்டர் நேருவும், உளவியல் நிபுணர் சிவசக்தியும் இருவரும் 5 வருடங்கள் ஒன்றாக சிறுவாச்சூரில் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில், லக்ஷ்ன் என்ற 3 வயது குழந்தையும் உள்ளது.
டாக்டர் நேரு நேற்று காலை 6.30 மணிக்கு எழுந்து வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த நாற்காலியில் சிவசக்தி என்பவர் எவ்வித அசைவும் இன்றி உட்கார்ந்த நிலையில் இருந்தாகவும், அவரை அவர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருந்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தியதில்,
டாக்டர் நேரு தனது முதல் மனைவி ஜான்சிராணியுடனும், இறந்த சிவசக்தி தனது முதல் கணவருடனும் விவாகரத்து பெறாமல் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இறந்து போன சிவசக்திக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே இருதய பிரச்சனை இருந்து வந்ததாக அவரது பெற்றோர்களும், கடந்த மூன்று வருடங்களாக இருதய பாதிப்பிற்கு தொடர் வைத்தியம் பார்த்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து மேலும் போலீசார் தீவிர நடத்தி வருகின்றனர்.
சிறந்த துணை என்பது, உடனிருப்பதோ உணவளிப்பதோ, உடையளிப்பதோ, கிடையாது. எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது.
எத்தனை படிப்பு படித்தாலும், தம்பதியினரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, அனுசரிப்பு, புரிதல் இல்லாத காரணங்களாலேயே அதிக அளவிலான விவாகரத்து நடக்கின்றன என்பதை இன்றைய இளம் வயதினர் புரிந்து கொணடால் மட்டுமே வாழ்க்கை பயணம் இனிதாக அமையும்.