A full explanation will be given after a thorough study on the allocation of 10.5 seats for the Vanniyar community; Minister SS Sivasankar

பெரம்பலூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்த பிற்பட்டேர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

சமூக வலைத்தளங்களில், அவரவர் கருத்தை வெளிப்படுத்துவார்கள், ஒரு கட்சியின் தலைவர் என்னுடைய கருத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 இட உள்ஒதுக்கீடு குறித்த என்னுடைய கருத்து என்ன என தெரியாமல் பதில் சொல்லி இருக்கிறார். என்னை பொறுத்தவரை அது குறித்து முஐழமயாக ஆய்வு செய்து பிறகுதான் பதில் அளிக்க முடியும். நான் கொரனா தடுப்பு அரியலூர் – பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறோம். தலைமை செயலகத்திற்கு சென்று, அவர்கள் எந்த துறையில் என்ன மாதிரி அறிவித்து இருக்கிறார்கள், முழுமையாக எடுத்து அதில் நிறை விசயம் இருக்கு, அதுகுறித்து முழுமையாக விரிவான பேட்டி கொடுத்தால் தான் விளக்கமாக வரும்,

கொரோனாவால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் இறந்வர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படும். மக்கள் ஒத்துழைக்க வேண்டும். காய்ச்சலுக்கு மருந்து தருவதை மெடிக்கல்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

காவலர்களுக்கு உதவியாக இருக்கும், ஊர்க்காவல்படையினரை முன்களப்பணியாளராக பணியாற்றி வருகிறார்கள், அவர்களுக்கு உரிய சலுகைள் நிவாரணம், கிடைக்க முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வோம். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள், நோயார்கள் சிகிச்சைக்கு முன்பே, அந்த மருத்துவமனை திட்டத்தில் இணைந்திருக்கிறதா என பார்த்து கொள்ள வேண்டும். காப்பீட்டு திட்ட அட்டையை முன்னதாக கொடுத்து விட வேண்டும். பழைய அரசாங்கம் போல் அல்லாமல், ஒவ்வொரு நாளுக்கான செலவுத் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது என தெரிவித்தார். அப்போது பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன், பொறியாளர் பரமேஸ்குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!