A government employee was killed in an unidentified vehicle collision near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நாரணமங்கலம் பகுதியில் இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில், வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானதாக கிடைதத தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார், இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்தவர்,
திண்டுக்கல் மாவட்டம், முல்லிப்பாடி அருகே உள்ள செட்டியப்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் அருண்மில்டன் (22) என தெரிய வந்தது. அவர், செங்கல்பட்டு மாவட்டம், பேரூரில் உதவி வேளாண்மை அலுலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தாண்டு விடுமுறையை முடித்து விட்டு. செங்கல்கட்டுக்கு அவரது பல்சல் பைக்கில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலே பலத்த காயமடைந்து இறந்தது தெரியவந்தது.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், மோதிவிட்டு நிற்காமல் தப்பி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.