A large bridge will be constructed between Labbaikudikkad and Arangur in Vellaar: Chidambaram Constituency AIADMK candidate Chandrakasan confirmed!

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் தனது கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில், தற்போதைய வேட்பாளர் தொல்.திருமாளவன் வெற்றி பெற்ற பிறகு, நன்றி தெரிவிக்க கூட வராதவர், வாக்களித்த தொகுதி மக்களுக்காக எவ்வித புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மேலும், சிதம்பரம் தொகுதி எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் பின்தங்கி உள்ளது. சிதம்பரம் மக்கள் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். மேலும், அவர் வெற்றி பெற்றால், லப்பைக்குடிக்காடு சுற்று வட்டார மக்களின் சிரமத்தை குறைக்க வெள்ளாற்றில் அரங்கூர் பகுதிக்கு சென்று புதிய பாலம் அமைப்பேன் என தெரிவித்தார். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

வேப்பூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள சிறுகுடல், கீழப்புலியூர், சிறுமத்தூர் குடிக்காடு, கே புதூர், நமையூர் பொன்னகரம், முருக்கன்குடி, பெருமத்தூர் குடிகாடு, பெருமத்தூர், நல்லூர், மிளகாய்நத்தம், பெண்ணகோணம் திருமாந்துறை, நோவா நகர், டி.கீரனூர், லப்பைக்குடிக்காடு, கீழக்குடிக்காடு, கழனிவாசல், ஆடுதுறை, ஒகளூர், புதுப்பேட்டை, இந்திரா நகர், அத்தியூர், அகரம்சீகூர், அகரம் சீகூர் பார்டர், ரெட்டி குடிக்காடு, வதிஷ்டபுரம், மேல காளிங்கராயநல்லூர், பள்ள காளிங்கராயநல்லூர், வேள்விமங்கலம், கீழப்பெரம்பலூர், வயலூர், கருப்பட்டாங்குறிச்சி, கைபெரம்பலூர், கிழுமத்தூர் குடிக்காடு, அத்தியூர் குடிக்காடு, கிழுமத்தூர், வடக்கலூர், பழைய அரசமங்கலம், கத்தாழை மேடு, அகரம் நன்னை சாத்தநத்தம், கிளியூர், கோவிந்தராஜ பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கொளுத்தும் வெயிலிலம், அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அரசு தலைமை கொரடாவும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தாமரை .எஸ். ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி ஆகியோர் சந்திரகாசனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் சந்திரகாசனுக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி மற்றும் மாவட்ட அணி பொறுப்பாளர்கள் மற்றும் தேமுதிக, உள்ளிட்டகூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!