A lawyer, Arul arrested for filing petition a video Threatened like a Pollachi incident in Perambalur

File Copy

பெரம்பலூர் அருகே உள்ளள குன்னம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த ஏப்.21ம் தேதி அன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், வழக்கறிஞர் கொடுத்த புகார் மனுவில், பெரம்பலூரில் பொள்ளாச்சி சம்பவம் போல், ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகரும், போலி செய்தியாளர் ஒருவரும், பெண் ஒருவரை பெரம்பலூர் நட்சத்திர விடுதி அறையில உல்லாசமாக இருக்க ஏற்கனவே எடுத்த வீடியோவை வைத்து மிரட்டியதாகவும், அவர்கள் மீது விசாரணை நடத்த கோரியும் மனு கொடுத்து இருந்தார்.

நேற்று சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த வழக்கை விசாரிக்க கோரி காவல் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதில், வழக்குரைஞர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், பட்டியல் இனத்தை சார்ந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மீது உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை உள்நோக்கத்துடன் பரப்பி வரும் பெரம்பலூரை சேர்ந்த வழக்கறிஞர் ப.அருள் என்பவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி மனு கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று குன்னம் வந்த அருள், பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் அருள் கைது செய்யப்பபட்டதற்கான வழக்குப் பிரிவுகள் இன்னும் முறையாக தெரியவரவில்லை. பின்னர், தெரிய வரும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!