A liquor brewer at Perambalur home caught up with the police along with an accomplice in a dispute with a Mistress!

பெரம்பலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வேங்கூர் அருகே உள்ள நெடுமுடியான் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை மகன் பாக்கியராஜ்(37), கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு, அம்பிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, பாக்கியா(15), என்ற மகளும் சரத் பாபு(12), திருமுருகன்(10), இரண்டு மகன்களும் உள்ளனர்.

இதனிடைய கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்த பாக்கியராஜூக்கு தன்னுடன் சித்தாள் வேலை பார்த்த, திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரின் மனைவியான ஜெயந்தி(31), என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது பத்து வயது மகனான ஹரிஹரனுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஜெயந்தி பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் பனிமலர் பள்ளி அருகே ஒரு வாடகை வீட்டில் கள்ளக்காதலன் பாக்கியராஜுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்திக்கும், பாக்கியராஜுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஜெயந்தி பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து, தனது கள்ளக்காதல் கணவன் பாக்கியராஜ் வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், ஊறலில் இருந்த 100 லிட்டர் சாராயத்தை கண்டறிந்து அதனை உடனடியாக அங்கேயே கொட்டி அழித்தனர்.

மேலும் குடிப்பதற்கு தாயார் நிலையில் வைத்திருந்த ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சட்ட விரோதமாக குடியிருக்கும் வாடகை வீட்டிலேயே நாட்டு சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக பாக்கியராஜையும் அவனது கூட்டாளியான கொத்தனார் வேலை செய்யும், கள்ளக்குறிச்சி மாவட்டம், வேங்கூர் அருகே உள்ள நெடுங்குடியான் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் குமரேசன்(25), என்பவனையும் கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலும், வருகின்றனர்.

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய கள்ளக்காதலனை, கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரம் அடைந்து, அவனது கள்ளக்காதலியே போலீசுக்கு தகவல் தெரிவித்து, கம்பி எண்ண அனுப்பிய சம்பவம் பெரம்பலூரில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!