A lorry was killed on a pedestrian near Perambalur: Arumbavur police investigated
பெரம்பலூர் மாவட்டம, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராமர் (வயது42) தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக வேலை செய்தார். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணாபுரம் – ஆத்தூர் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் நோக்கி சரக்கு ஏற்றி சென்ற லாரி ராமர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ராமர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக லாரி டிரைவர் திருச்சி மாவட்டம், செங்காட்டுப்பட்டியை சேர்ந்த நரேஷ்குமார் (30) என்பவரை அரும்பாவூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.