A man jokingly arrested near Namakkal: 11 pound jewelry confiscated
பள்ளிபாளையம் அருகே நகைத் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11பவுன் நகை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவனாம்பாளையத்தில் கடந்த 20ம் தேதி பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்பி அர. அருளரசு உத்திரவின்படி பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியான சுற்றித்திரிந்த நபரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லுார் செங்குட்டையைச் சேர்ந்த கே. பிரபு (வயது 44) எனத் தெரியவந்தது.
மேலும், இவர் தேவனாம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைத் திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் இருந்த 11 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.