A man stabbed to death by an iron rod near Perambalur: Police arrested 4 people
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் கிராமம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் அய்யாதுரை மகன் ஆனந்தகுமார்(52). இவர் பாடாலூரில் உள்ள ஊட்டத்தூர் பிரிவு சாலை பகுதியில் செருப்பு கடை நடத்தி வந்தார்.
ஆனந்த்குமாருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சுரேஷ் என்பவருக்கும் பல்வேறு விசயங்களில் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், தனது வீட்டின் முன் படுத்து இருந்த தெரு நாய்களை அடித்து விரட்டியுள்ளார். இதனால், ஆனந்த்குமாருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சுரேஷ் என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், ஆனந்த் குமாரை, சுரேஷ், சுரேஷின் மனைவி கீதா, மகன் கவுஷிக் உள்ளிட்ட 4 பேர் இரும்பு கம்பியால் தாக்கியும், குத்தியும் கொடூரமாக கொலை செய்து விட்டனர்.
தகவல் அறிந்த பாடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்த ஆனந்த் குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் சுரேஷ், கீதா, கவுஷிக் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆனந்த் குமார் குடும்பத்தாருக்கும், சுரேஷ் குடும்பத்தாருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், வீட்டின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தெரு நாய்களை ஆனத்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி பேசி, விரட்டி அடித்ததால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் கொலையில் முடிந்தது தெரிய வந்ததுள்ளது. மேலும், இது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.
விளம்பரம்: