A Miss youngster near Perambalur was stabbed to death! Police investigate
பெரம்பலூர் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் சடலம் கண்டெடுப்பு: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
பெரம்பலூர் அருகே உள்ள நெச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் – மாரியாயி மகன் முனுசாமி (வயது 25), கொத்தனார் வேலை செய்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போனார்.
இந்நிலையில் விளாமுத்தூரிலிருந்து, நொச்சியம் செல்லும் சாலையில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான வயலில் கழுத்து அறுபட்ட நிலையில் முனுசாமி இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில், எஸ்பி.,திஷாமித்தல் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று முனுசாமியின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முனுசாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.