A new branch of Mysore Filter Coffee; Opening today at Perambalur 4 Road Junction!

மைசூர் பில்டர் காபி நிறுவனம் 2014 ஆண்டு முதல் தமிழகத்தின் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2000 ஆண்டு முதல் காபி பவுடர் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.

பெரம்பலூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் கிளை கே.வி.பி வங்கி அருகில் தொடங்கப்பட்டது. இதன் ரிச் சுவை, அதிக ஒரிஜினல் மணம் மற்றும் மிகுந்த தரம் கொண்ட பாரம்பரிய முறையில் நேர்த்தியான காபி கொட்டைகளை கொண்டு காபி பவுடர் தயாரித்தல், வாடிக்கையாளர்கள் பாக்கட் பிரண்ட்லி விலை, அளவு மற்றும் சுத்தம் சுகாதாராம், பல்வேறு வகை ஸ்நானக்ஸ்கள் ஆகியவை அதிகளவு பெரம்பலூர் நகர வாடிக்கையாளர்களை அதிகளவு கவர்ந்ததால், கூடுதலாக பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் ஒரு கடை திறக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து, மைசூர் பில்டர் காபியின் 3வது கிளையாக பெரம்பலூர் 4ரோடு சந்திப்பு அருகே அதன் புதிய கிளை திறப்பு இன்று காலை அஸ்வின்ஸ் குழும நிறுவனர் கே.ஆர்.வி கணேசன் திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், நாமக்கல் மைசூர் ஃபில்டர் காபி மணிராஜா மற்றும் ராகுல், கோயமுத்தூர் காரம் காபி சதீஷ், திருச்சி பேங் ஆப் பரோடா மேலாளர் சுந்தரராஜன், பெரம்பலூர் மைசூர் ஃபில்டர் காபி நிர்வாக இயக்குனர்கள் ரவீந்திரன்- நித்யா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என். ராஜேந்திரன், உள்ளிட்ட பல வணிகர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என பல தரப்பினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வாழ்த்து தெரிவித்தனர்.

காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை வருகை தந்து வாழ்த்திய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இன்று ஒரு நாள் கட்டணமில்லாமல் காபி விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!