A protest demonstration in Perambalur demanding the use of old ballot papers in elections and relief for storm-flood damage!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தென் மற்றும் வட மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை இயற்கை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியும், மின்னனு வாக்கு முறையை ஒழித்து மறுபடியும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தப்பட வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு, பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல் மற்றும் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் தலைமை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் ந.கிருஷ்ணக்குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் கிழக்கு சி.பாஸ்கர், இரா.பிச்சைப்பிள்ளை, பெரம்பலூர் மேற்கு எம்.பி.மனோகரன், வேப்பூர் வடக்கு இரா.வரதராஜன், வேப்பூர் தெற்கு ஆ.நந்தன், ஆலத்தூர் பெ.இளமாறன், வேப்பந்தட்டை மேற்கு எ.வெற்றியழகன், வேப்பந்தட்டை கிழக்கு மா.இடிமுழக்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

முன்னதாக பெரம்பலூர் நகர செயலாளரும், கவுன்சிலருமான தங்க.சண்முகசுந்தரம் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் மற்றும் பெரம்பலூர் மேலிடப்பொருப்பாளர் கவிஞர் கி.இளமாறன், ஒருங்கிணைப்பாளராக இரா.கிட்டு ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் விசிக பொறுப்பாளர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர் வீர. செங்கோலன், மற்றும் தமிழ்மாணிக்கம், நாரணமங்கலம் லெனின், எசனை ஸ்டாலின், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!