A. Raja campaign in support of Perambalur DMK candidate Prabhakaran!

48 மணி நேர தடை முடிந்து ஆ.இராசா எம்.பி அரும்பாவூரில், பெரம்பலூர் திமுக வேட்பாளர் பிரபாகரனுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், இன்று களத்தில் நிற்பது இரண்டு பேர்.மு.க.ஸ்டாலின் எடப்பாடி என பத்திரிக்கைகள் கூறுகின்றன. இந்திரகாந்தி கொண்டுவந்த கொடுங்கோலை எதிர்த்தால் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்ட போது, புதுமாப்பிள்ளையாக இருந்த முக ஸ்டாலின் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார் என்றும், மு.க.ஸ்டாலின் படிப்படியாக பரிணாம வளர்ச்சிபெற்று பூர்ணத்துவம் பெற்றவர் என்றும் மு.க.ஸ்டாலின் கட்சியிலும் ஆட்சியிலும் படிப்படியாக பொது வாழ்க்கையில் வளர்ந்தவர் என்றும் தெரிவித்த அவர்
எடப்பாடி யார், சிறை சென்றாரா, பொதுமக்களுக்காக போராடினா? என கேள்வி எழுப்பியதுடன் ஊர்ந்து போய் குறுக்குவழியில் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சனம் செய்ததுடன், அதிகாரத்தால் சித்தரிக்கப்படுபவர் எடப்பாடிபழனிச்சாமி, படிப்படியாக வளர்ந்தவர் மு.கஸ்டாலின் என நான் கூறியதற்கு என்மீது வழக்குபோட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

மேலும் ஜெயலலிதா இருக்கும் வரை மோடி பாச்சா தமிழகத்தில் பலிக்கவில்லை என்றும் ஜெயலலிதாவிடம் விடம் துணிச்சல் இருந்ததால் மோடி பயப்பட்டார் என்றும் தெரிவித்த ஆ.ராசா எம்.பி, ஜெயலலிதா ஊழல் செய்துள்ளார் என சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளது எனவே, மீண்டும் அம்மா ஆட்சி என்று எடப்பாடி கூறுவது ஜெவைபோன்று ஊழல் செய்வதற்கே என பேசினார்.

எடப்பாடி யை இயக்குவது யார்? அவரை காப்பாற்றும் டாக்டர் டெல்லியில் இருந்துவருகிறார் என மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய ஆ.ராசா, பத்தாண்டுகாலம் ஆட்சியில் இல்லாத திமுக வை ஊழல் கட்சி என்று எப்படி சொல்லமுடியும் என கேள்வி எழுப்பினார். உதய் திட்டத்தால் இன்னும் கொஞ்சநாளில் இலவசமின்சாரம் பறிபோகபோகிறது என தெரிவித்த அவர் மோடி தமிழ்நாட்டிற்கு என்ன நல்லது செய்தார் என கேள்வி எழுப்பியதுடன் குடியுரிமை சட்டம் கொண்டுவந்த போது திமுக எதிர்த்தது.அதிமுக ஆதரித்தது என்றும் எடப்பாடி பழனிச்சாமி விவசாயி என்கிறார். பச்சதுண்டு போட்டனெல்லாம் விவசாயி கிடையாது என்றும் புதிய வேளாண் சட்டத்தை ஆதரித்தவர் தமிழத்தின் உரிமையை அடகுவைத்துவிட்டார் என்றும் ஆ.ராசா எம்பி பரப்புரையின் போது பேசினார். மேலும், 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவகல்லூரியை கொண்டு வர முடியாத இப்பகுதி எம்.ஏல்.ஏக்கள் எப்படி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக் வருகின்றனர் என பேசினார்.

நல்லாட்சி மலர்ந்திட வரும் சட்ட மன்ற தேர்தலில், உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பொறியாளர் பரமேஸ்வரன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, ஜெகதீசன், மற்றும் அழகுவேல், வேப்பந்தட்டை சேர்மன் ராமலிங்கம், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, உள்ளிட்டட கட்சி முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பின்னர், வேப்பந்தட்டை, குரும்பலூர், செட்டிக்குளம் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!