A.Raja, consoled his assistant!
முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜாவின், டெல்லி அலுவலக முன்னாள் நேர்முக உதவியாளர் சோ.ராஜனின் தந்தை ஆ.சோணாசலம் அண்மையில் காலமானார். அதற்கு, திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற ஆ.ராஜா உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட கழகச் செயலாளர் டி.பி.எம்.மைதீன்கான், தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் சென்றிருந்தனர்.