A.Raja MP Thanks to Tamil Nadu Chief Minister M.K.Stalin!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராஜா சந்தித்தார். அப்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகளின் நலன் காத்திட பசுந்தேயிலைக்கு ஊக்கத்தொகையாக கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வழங்கப்படும் என்றும் 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.