A. Raja’s wife Parameswari passed away today!
திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பி யுமான ஆ.இராசாவின் மனைவி பரமேஸ்வரி, சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல், சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேலூரில், நாளை காலை அடக்கம் செய்யப்பட உள்ளது. முக்கிய பிரமுகர்கள், கட்சியினர், அஞ்சலி செலுத்தி வருகின்றர். இந்த சம்பவம், பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.