A request to set up a rehabilitation center for spinal cord injury victims in Perambalur!
பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து போன்றவற்றால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சுமார் 700 பேர் உள்ளனர். இவர்கள் படுக்கையிலேயே இருப்பதல் படுக்கை புண் ஏற்படுகிறது. மேலும், உடல் ரீதியான பாதிப்பை சந்திக்கின்றனர். இவர்களுக்கான மறுவாழ்வு மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைத்து தரவேண்டும் என நீண்டநாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம் கள்ளக்குறிச்சி போன்ற அருகாமை மாவட்டங்களில் அரசு மறுவாழ்வு மையம் இல்லை என்பதால், சிகிச்சை எடுத்து கொள்ள முடியவில்லை.
தனியார் மையங்களில் சிகிச்சை பெறும் அளவிற்கு வசதியில்லை என்பதால், எனவே, தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாற்றுத் திறனாளிகள் துறையினர் நிலை அறிந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் தண்டுவடம் பாதிக்கட்டோருக்கான மறுவாழ்வு மையத்தை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இம்மையம் இருந்தால் பயிற்சி பெற்று சராசரி மனிதனாக வாழமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.