a review meeting of Corona disease prevention activities in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் களப்பணியை ஒருங்கிணைப்பு செய்திட நியமிக்கப்பட்டுள்ள மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம் மருத்துவ துறையால் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வளர்ச்சித்துறை, நகராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டார்.

அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நோய்தொற்றிலிருந்து பொதுமக்களை காக்கும் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறத்தினார்.

இவ்வாய்வுக்கூட்டத்தில், பெரம்பலூர் கலெக்டர் வே. சாந்தா, போலீஸ் எஜ்.பி நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் இராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.பெருமாள், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!