A student was bitten by a snake at Perambalur school!
பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறைக்கு சென்ற மாணவனை பாம்பு கடித்தது. அந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும், ஆதித்தியா என்ற மாணவர் இன்று காலை கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு ஊர்ந்து கொண்ட இருந்த பாம்பை கண்ட மாணவன் அலறிய நிலையில் பாம்பு கடித்தது. இதை அறிந்த ஆசிரியர்கள், மாணவர்கள் முதலுதவி செய்து, அருகே உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.