A student who studied for free through the Almighty School Olympiad exam, also succeeded in the NCET exam! Congratulations Chairman Ramkumar!!
பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக என்சிஇடி தேர்வில் வெற்றி பெற்ற சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவி, அப்பள்ளி சேர்மன் ராம்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவி மத்திய அரசு நடத்தும், என்சிஇடி தேர்வில் வெற்றிப் பெற்று அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பெரம்பலூரை சேர்ந்த சக்திவேல் – ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுரா. இவர் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பியாட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் ஆல்மைட்டி பள்ளியில் 6ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வியில் சேர்க்கை பெற்று படித்தார்.
கொரோனா காலத்தில் இவரது பெற்றோர் வேறு ஊருக்கு பிழைப்பு நடத்த செல்ல இருந்த நிலையில் சுமார் ஒன்றரை மாதம் பள்ளிக்கு மாணவி வராததை இருந்ததை அறிந்து, பள்ளி தாளாளர் அவர்களின் பெற்றோர்களிடம் தன்மகளுடன் விரும்பினால் தங்கி பயிலாம் என்றும் தெரிவித்தர். ஆனால், பெற்றோர்கள் வேறு ஊருக்கு செல்லாமல் பெரம்பலூரிலேயே வேலை செய்து வந்தனர்.
பின்னர், உடலை சரியில்லாததால், +2ல் மதிப்பெண் எதிர்பார்த்த அளவிற்கு எடுக்க முடியவில்லை. தீவிர முயற்சி செய்ததோடு, பள்ளி நிர்வாகம், கல்வியாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் வழிகாட்டலால் என்சிஇடி தேர்விற்கு படித்து வந்தார்.
மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்சிஇடி) 2023 ஆண்டு தேர்வினை எழுதிய மாணவி மதுரா, முதல் முறையிலேயே வெற்றி பெற்று, அதிகளவு மார்க் பெற்று அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்தார். இதையடுத்து மதுராவிற்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் ஐடிஇபி 4 ஆண்டு கோர்ஸ் கல்வி பயில மெரிட்டில் இடம் கிடைத்து சேர்ந்துள்ளார்.
என்சிஇடி தேர்வில் அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி மதுராவை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி தாளாளர் ராம்குமார், அகடாமி இயக்குநர் கார்த்திக் , பள்ளி முதல்வர் சாரதா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். மத்திய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்த சாதனை படைத்த பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்வியை 4 ஆண்டுகள் முடிப்பதன் மூலம், நேரிடையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிகராகவும், மத்திய அரசின் பணிக்கும் செல்ல முடியும். தேர்வில் வெற்றி பெற்ற மதுரா, செல்போனை பெற்றோர் அனுமதியுடன் தான் கல்வி தொடர்பான விசயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
ஆல்மைட்டி பள்ளியில நடத்தப்படும் ஒலிம்பியாட் எனும் போட்டித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில் கலந்து கொண்ட மதுரா முதல் மதிப்பெண் பெற்றுள்ளளார். மேலும், அவர் ஏற்கனவே படித்த தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த நிலையில், ஆல்மைட்டி பள்ளி சேர்மன் மதுராவிற்கு 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயில அனுமதித்துள்ளார். இதனால், பள்ளியால் மாணவிக்கும், மாணவியால் பள்ளிக்கும் நற்பெயர் கிடைத்துள்ளது,