A temple was not built at the birthplace of Rama; MDMK Durai. Vaiko interview

பெரம்பலூருக்கு வருகை மதிமுக கட்சியின் தலைமைக் கழக செயலாளர் துரை.வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் தெரிவித்ததாவது:

எந்த ஒரு கடவுளோ மதமோ மக்களிடையே பகையை உருவாக்கி மனித உயிர்களை காவு வாங்கி அதன் மூலம் ஒரு கோவிலை அமைத்து இறைவனை வழிபட வேண்டும் என கூறுவதில்லை, இருந்த போதிலும் ஒரு மசூதியை இடித்துவிட்டு இங்கே ராமர் கோவிலை அமைத்துள்ளார்கள்.

ஏன் அதே இடத்தில் கோவிலை கட்ட வேண்டும் எனக் கேட்டதற்கு, அங்கதான் ராமர் பிறந்தார். அங்கு தான் ஏற்கனவே இந்து கோவில் இருந்தது அதை இடித்துதான் மசூதியை கட்டினார்கள். அதனால், மசூதியை இடித்தோம் என்றனர்.

ஆனால், தமிழ்நாட்டு மக்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளதா என கேட்டால் அதுதான் இல்லை. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தான் ராமர் கோயிலை கட்டி உள்ளார்கள். ஏன் என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.

அன்பின் அடையாளம் தான் கடவுள் ராமர். இதை அந்த ராமரே விரும்பி இருக்க மாட்டார்.. பாபர் மசூதி இடிப்பின் போது பல்லாயிரக்கணக்கான உயிரிழந்தனர். எந்த மதமும் கடவுளோ மக்களை கொல்ல வேண்டும் என சொல்லுவதில்லை. அனைத்து மதத்திலும் இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள்.‌ ஒன்று ரிலீஜியஸ் (மதத்தை சார்ந்தவர்கள்).. மற்றொன்று பொலிட்டிக்கல்ஸ் (மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள்).. இது மதம் சம்பந்தப்பட்ட நிகழ்வு என சொல்ல முடியாது. இது பிஜேபி நடத்திய அரசியல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். இந்து மதத்தில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா மதத்திலும் சர்ச்சைகள் இது போல் உள்ளது என தெரிவித்தார்.

அப்போது மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், அரியலூர் எம்.எல்.ஏ சின்னப்பா, ரோவர் கல்லூரி நிறுவனங்களின் சேர்மன் வரதராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் துரைராஜ், பேரளி சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!