A thirty year old church is a Hindu temple in the United States

அமெரிக்காவில் 30 ஆண்டுகால பழமையான தேவாலயம் ஒன்று இந்து கோயிலாக மாற்றப்படுகிறது.
அமெரிக்காவில் விர்ஜீனியாவின் போர்ட்ஸ்மவுத்தில் 30 ஆண்டுகால பழமையான தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தை குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த சுவாமி நாராயணன் கோயில் அறக்கட்டளை ஒன்று விலைக்கு வாங்கி அதனை கோயிலாக மாற்றவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நாராயணன் கோயில் அறக்கட்டளை மடாதிபதி பகவத் பிரியதாஸ் சுவாமி கூறும் பாேது, அகமதாபாத்தில் உள்ள நாராயணன் சுவாமி கோயில் போன்று அமெரிக்காவின் விர்ஜீனியாவில் உள்ள தேவாலயம் மாற்றி அமைக்கப்படும்.
இதற்காக அந்த தேவாலயம் ரூ.112 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. தற்போது கோயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்