A truck carrying fish to Kerala caught fire near Perambalur!
கடலூரில் இருந்து, கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகத்திற்கு மீன்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சென்றுக் கொண்டு இருந்த போது, லாரி திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. இதைக் கண்ட லாரி வண்டியை நிறுத்தி குதித்து தப்பித்தார். லாரி முன் பகுதி முழுவதும், எரிய தொடங்கியது, இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, அதனை போலீசார் சீர் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.