A truck carrying sacks of maize overturned near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட்டில் இருந்து செட்டிக்குளம் – துறையூர் சாலையில் நாமக்கல் நோக்கி லாரி ஒன்று மக்காச்சோளம் மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்தது. லாரி குரூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஓட்டுனர் மற்றும் உடன் பயணித்தவர்கள் நல்வாய்யப்பாக காயமின்றி தப்பினர்.