A twist in the incident where a Young woman hanged herself in a private school hostel in Perambalur: A case has been registered against 2 people!


விழுப்புரம் மாவட்டம் திருவண்ணைநல்லூரை சேர்ந்த திருவள்ளுவன் மகள் சுபா ஆடலரசி (26). பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் மெட்ரிகுலேசன் பள்ளியின் அலுவலக உதவியாளராக பணிபுரிந்துகொண்டு அதே பள்ளியின் மாணவிகள் விடுதியில் விடுதிகாப்பாளராகவும் பணிபுரிந்ததுள்ளார்.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி தனது மூத்த சகோதரனின் திருமணத்திற்காக விடுப்பு எடுத்து வீட்டிற்கு சென்றவர், பள்ளியில் ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக 23 – ஆம் தேதி வந்ததாகவும், அன்று முற்பகல் சுமார் 12 மணிவரை சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்த அவர் அதன் பின் விடுதி அறைக்கு சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் 24-ஆம் தேதி மதியம் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் விஜயலட்சுமி என்பவர் விடுதி அறைகளை சுத்தம் செய்ய சென்ற போது விடுதி காப்பாளர் சுபஆடலரசி தனது துப்பட்டாவால் தூக்கிட்டவாறு விடுதி அறையிலுள்ள மின்விசிறியில் தொங்கியுள்ளது கண்டு அலறியபடி வெளியேவந்துள்ளார்.

இதனிடையே இது குறித்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறப்பதற்கு முன்பாக சுபாஆடலரசி கைபட எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக சம்பவம் தொடர்பாக தற்கொலை வழக்குபதிவு செய்h போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே இறந்துபோன ஆடலரசியின் உடலை காணவந்த அவரது பெற்றோர் தனதுபெண் என்றும், தற்கொலை செய்துகொள்ளகூடியவர் இல்லை என்றும் மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என போலீஸாரிடம் தெரிவித்திருந்தனர் அத்துடன் 4 நாள் விடுமுறையில் பள்ளி மற்றும் விடுதியில் ஒருவர்கூட இல்லாதபோது விழுப்புரத்திலிருந்து எனது பெண்ணை பள்ளி நிர்வாகம் நேற்று ஏன் அழைத்தது என சந்தேகம் எழுப்பினார்.

இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் சுப ஆடலரசி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அதே கல்லூரியில் பணியாற்றிவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து அவரிடம் நடத்திய இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் பழகியும், இருவரும் சேர்ந்து வெளியூர்களுக்கு ஒன்றாக சுற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும் கடைசியாக சத்தியராஜ் உடன் இராமேஸ்வரம் சென்றுவிட்டு வந்த பிறகு பழைய காதலனை மறக்க முடியாமல் தவித்த, சுப ஆடலரசிக்கும், சத்தியராஜுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதனால் மனமுடைந்த சுபா கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது .இதையடுத்து சத்தியராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியது என்ற பிரிவின்கீழ் (எண் 306) வழக்கு பதிவு செய்த போலீஸார் சத்தியராஜை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்த நிலையில்,

மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த காதலன் அன்பின் பொன்மொழி மீதும் போலீசார் வழக்குப் பதிந்து உள்ளனர். கல்வி குழுமத்தில் நடந்த காதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இறந்து சுப ஆடலரசி எழுதிய கடிதத்தின் சில பகுதிகள்:

அன்புள்ள ….. காக என்னுடைய திருமண வாழ்த்துக்கள். தங்களுடைய திருமண செய்தியை நான் அறியேன். சக்தி திருமணத்திற்காக ஊருக்கு சென்றபொழுது யாரோ ஒருவர் சொல்லி தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி. என்றும், நலமுடன் வாழ!

நிறைய கனவுகளுடன் காத்திருந்த எனக்கு நிறைய ஏமாற்றம், இருப்பினும் என்னுடைய வருத்தம் ஒன்று தான் என்னிடம் கூறியிருந்தால் நானே விலகியிருப்பேன். தேவையில்லாமல் இத்தனை நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இக்கடிதம் தங்களை வந்து சேரும் முன்னே நான் இறைவனடி சேர்ந்திருப்பேன். இதற்கு காரணம் தங்கள் மீது உள்ள கோவம் அல்ல. காதல் வாழ்வின் இறுதி நொடியிலாவது தங்களுடன் வாழவேண்டும் என்ற ஆசையில், “காத்திரு” என்று தாங்கள் கூறிய ஒற்றை சொல்லை மனதில் நிறுத்தி இத்தனை வருடம் காத்திருந்தேன். இனி நான் காத்திருப்பதில் பலன் இல்லை என்று தெறிந்ததும் விடை பெறுகிறேன்.

ஒரு பெண்ணின் கணவரான உங்களை நினைப்பது பாவம். உங்களை மறந்து வாழ்வது என்பது இயலாத காரியம் அது நான் என் காதலுக்கு செய்யும் துரோகம். இரண்டையும் என்னால் செய்ய முடியாது. உங்களிடம் இறுதியாக நான் வேண்டுவது ஒன்று தான் நான் உங்கள் மீது வைத்த காதல் உண்மையானது. தூய்மையானது. அதை என்றும் தவறாக என்ன வேண்டாம். நான் என்றும் உங்களுக்கு துரோகம் இழைக்கவில்லை. தயவு செய்து என்னை நம்புகள். ஏன் பிரிந்தோம் என்ற காரணம் அறியாமலேயே செல்கிறேன். என்றாவது நீங்கள்

உன் உண்மையான காதலை உணர்ந்தால் என் கல்லறை வந்து கூறுங்கள் நான் செய்த தவறு என்னவென்று,

எப்படியெல்லாமோ வாழவேண்டும் என்று ஆசையில் இருந்த என்னை இறைவன் ஏமாற்றி விட்டார். அவரிடம் சென்று நான் கேட்பேன் நான் செய்த தவறு என்ன என்று.

மனைவியாக முடியவில்லை என்றால் என்ன… மகளாக காத்திரு.. கையில் ஏந்த விரைவில் வரம் வாங்கி வருவேன்.

தற்பொழுது விடை பெறுகிறேன் உன்தீராத நினைவுகளுடன்// அன்பின் அரசி

கடிதத்தில் துவங்கிய காதல்
கடிதத்தில் முடிந்தது.

மற்றொரு கடித்த்தில்….

தீராத மனஉளைச்சல் காரணமாகவும். உடல்நிலை

மற்றொரு கடிதத்தில் சரியில்லாத காரணத்தினாலும் நான் இம்முடிவை எடுத்துள்ளேன். இதற்கு வேறு எவரும் காரணமல்ல… என்றும் கடிதத்தில் முடித்துள்ளார்.

இறப்பதற்கு முன்னர் சுப ஆடலரசி அவரது அக்காவிடம் போனில் பேசியதை கேட்டும் வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும், குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!