A woman doctor who went on a bike in Perambalur was robbed of her gold jewelry at knifepoint! Police are actively investigating
![](https://i0.wp.com/www.kalaimalar.com/wp-content/uploads/2015/07/chain-snaching-1.jpg?resize=300%2C233&ssl=1)
கற்பனை காட்சி
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த அருண் பிரசாத் மனைவி யாழினி (30). ஆங்கில மருத்துவர். எம்.பி.பிஎஸ் முடித்த அவர், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் மருத்துவ படிப்பில் நுரையீரல் தொடர்பாக படித்து வருகிறார். கல்லூரி முடிந்தவுடன் பெரம்பலூர் நகரத்திற்கு சென்று திரும்பிய அவர் கலெக்டர் அலுவலகத்திற்கும், தேசிய நெடுஞ் சாலைக்கும், இடைப்பட்ட பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கத்தி முனையில் டாக்டர் யாழினி அணிந்திருந்த தாலிக்கொடி குண்டு காசு மோதிரம் என சுமார் எட்டு பவுன் தங்க நகைகளை கத்தி முனையில் பறித்து சென்றனர். இது குறித்து யாழினி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் மற்றும் போலீஸ் எஸ்.பி. ஷ்யமளா தேவி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் மேலும் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் கிடைக்குமா என ஆய்வு நடத்தி வருகின்றனர். பெண் மருத்துவரிடம் நகைகள் பறித்து சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றப்பிரிவு போலீசார் மேலும் இது தொடர்பான தடயங்களையும், அங்க அடையாளங்களையும் வைத்தும் புலனாய்வு நடத்தி வருகின்றனர்..