A woman in Tirupur, Missing with one-year-old girl near Namakkal

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஒன்றறை வயது குழந்தையுடன் காணமல் போன பெண் திருப்பூரில் மீட்கப்பட்டார்.

திருச்செங்கோடு, சக்திநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 25).இவர் அவரது ஒன்றறை வயது குழந்தையுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதியிலிருந்து காணவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசில் பழனியம்மாளின் தாய் மாரியம்மாள் புகார் அளித்தார். மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் காணாமல் போன பழனியம்மாள் எவ்வித செல்போன்எண்ணும் வைத்திருக்கவில்லை. எங்கு சென்றுள்ளார் என்றும் கடந்த 25 நாட்களாக எவ்வித தொடர்பும் இல்லையென்றும், பெற்றோர் மற்றும் கணவன் வீட்டு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பின்பு விசாரணையை வேறு கோணத்தில் மேற்கொண்டு காணாமல் போன பழனியம்மாள் நண்பர்கள் மற்றும் காணாமல் போவதற்கு முன்பு நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களின் தொடர்புகளை கண்டறிந்து விசாரணையை தீவிரபடுத்தப்பட்டது.

இதில் காணாமல் போன பழனியம்மாள் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும் தொடர் விசாரணையில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டது. இதனால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர்கள் மூலம் திருப்பூரிலிருந்து திருச்செங்கோடு வந்து அவரது தாயுடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

போலீஸ் துறையின் தீவிர விசாரணையின் பேரில் 15 நாட்களில் காணாமல் போன தாய் மற்றும் சேய் இருவரையும் கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இந்த வழக்கில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் தீவிர புலன் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினரை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பாராட்டினார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!