A worker who hunted a rabbit near Perambalur was paid Rs. 10 thousand fine!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நக்கசேலத்தை சேர்ந்த ராமன் மகன் சுக்கிரன் என்பவர் வேப்பந்தட்டை அருகே உள்ள அனுக்கூர் குடிக்காடு கிராமத்தில் கிணறு தோண்டும் பணி செய்து வந்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த முயலை வேட்டையாடி சமைக்க வைத்திருந்தார். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், சமைக்க வைத்திருந்த முயலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், குற்றத்தை ஒப்புக் கொண்டு இணக்க கட்டணம் கட்ட சம்மதித்தால், முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக அபராதமாக ரூ.10 ஆயிரம் விதித்தனர்.