A Youth who made a schoolgirl pregnant near Perambalur was arrested in Pocso Act!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரை சேர்ந்த பாலு மகன் ராமலக்கன் (23). தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 11ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து, அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து போது
அந்த மாணவி 2 மாதம் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.