A youth who robbed a pedestrian near Perambalur was arrested!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் நடந்து சென்ற ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பாடாலூர் போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா நெடுங்கூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெள்ளைச்சாமி (50) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 500 ரூபாயை பறித்துச் சென்றார்.
இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சக்தி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மதன்குமார் (22) என்பதும் அவர் மீது திருச்சி மாவட்டத்தில் 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.