Aadhaar Linked Bank Account Opening Arranged by Postal Department: Perambalur Collector Info!
பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கல்வி உதவித் தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணாக்கர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கி பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.