Aadhaar number should be connected to the smart ration card by 31st; Namakkal Collector
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பொதுவிநியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய ஆதார் எண்களையும் ஸ்மார்ட் கார்டில் இணைக்கப்பட வேண்டும் என அரசால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களின் ஸ்மார்ட் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடைய ஆதார் எண்களை வரும் 31 ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் ஸ்மார்ட் கார்டில் உள்ள குழந்தைகளுக்கு (1 முதல் 5 வயது வரை) பிறப்பு சான்றிதழ் மூலம் ஏற்கனவே பதிவு செய்திருப்பின், அவர்களுக்கும் தற்போது ஆதார் எண் பதிவு செய்யப்படவேண்டும். தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் புதியதாக ஆதார் எடுக்கும் நபர்களுக்கு இலவசமாக ஆதார் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையவேண்டும் என தெரிவித்துள்ளார்.