Aari training for Women by Perambalur IOB Bank
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்பிராய்டரி,ஆரி,மகம் வேலைப்பாடு பயிற்சி வகுப்பு வருகிற ஜூன் 3ம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு உண்டான வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக,பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேற்கண்டபயிற்சியின் காலஅளவு 30 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து மே 31ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 என தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.