Abdul Kalam’s Birthday Celebration on behalf of Namakkal Kamaraj Educational Institutions
நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவனங்களில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த தினம் மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் நல்லதம்பி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சியும், அவரின் இலட்சியங்களை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். முடிவில் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் மோகனப்பிரியா நன்றி கூறினார்.