Abroad to send money home, working in the first place, followed by India
வெளிநாடுகளில் பணிபுரிவோர் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக ரெமிட் ஸ்கோப் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, துபாய், சிங்கபூர் உள்பட பல்வேறு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் தாய் நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு மாதம் தொறும் பணம் அனுப்புகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து அவர்கள் பணம் அனுப்புவதை ஆய்வு செய்துள்ள இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரெமிட் ஸ்கோப் என்ற அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் தாயகத்திற்கு ரூ.4.65 லட்சம் கோடியை அனுப்பியதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 2016ம் ஆண்டை விட 9.9 சதவிகிதம் அதிகம் என்றும் கூறியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ரூ.4.30 லட்சம் கோடியுடன் சீனா 2வது இடத்திலும், ரூ.2.22 லட்சம் கோடியுடன் பிலிப்பைன்ஸ் 3வது இடத்திலும் இருப்பதாக ரெமிட் ஸ்கோப் அறிக்கையில் தெரிவித்துள்ளது.